search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் பாதிப்பு"

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் திடீரென அமல்படுத்தப்பட்ட மின்வெட்டால் விடிய விடிய தூங்க முடியாமல் தவித்தனர்.
    நெல்லை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெப்பம் மேலும் அதிகரித்தது. கோடை காலம் தொடங்கியதில் இருந்து நெல்லை உள்ளிட்ட பல நகரங்களில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது.

    பகல் நேரத்தில் கடும் வெயில் அடிப்பதால் இரவிலும் கடும் வெப்பம் நிலவுகிறது. மின் விசிறியை இயக்கினாலும் வீட்டினுள் இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் கடுமையாக உள்ளது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் தவிக்கும் மக்கள், இரவிலும் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    கோடை வெப்பம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருப்பதால் மின் பயன்பாடு வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலான வீடுகளில் குளிர் சாதன பெட்டி இருப்பதால், அவை பகல் மற்றும் இரவு நேரத்தில் இயக்கப்படுவதால் மின் நுகர்வு அதிகமாக இருக்கிறது.

    அதே வேளையில் மின் உற்பத்தி வழக்கத்தை விட குறைந்துள்ளது. காற்று அடிக்காமல் இருப்பதால் காற்றாலை மின் உற்பத்தி பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்ட புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை மின்வெட்டு ஏற்படும் போது 2 முதல் 3 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால் கிராமபுற மக்கள் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை மாநகர பகுதியில் நேற்று முதல் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மின்வெட்டு நிலவியது. பல இடங்களில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. தச்சநல்லூர் பகுதியில் சில இடங்களில் சுமார் 3 மணி நேரம் வரை மின்சாரம் இல்லாமல் இருந்தது.

    சாந்திநகர், கக்கன்நகர் பகுதியிலும் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லை. மேலப்பாளையம், நெல்லை சந்திப்பு, டவுன், தியாகராஜநகர், அன்புநகர், பெருமாள்புரம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மின்தடை ஏற்பட்டது. புறநகர் பகுதிகளில் கடையம், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, அம்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மின்வெட்டு நிலவுகிறது. திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் பகுதிகளில் நேற்று இரவு 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதே போல் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பரவலாக மின்வெட்டு பிரச்சினை உள்ளது.

    இந்த திடீர் மின்தடை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். கிராம புறங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து முற்றத்தில் படுத்தனர்.

    ஏற்கனவே கோடை வெயிலால் இரவில் நிலவிய கடும் வெப்பத்தால் அவதிப்பட்ட மக்கள், நேற்று மின் தடையும் ஏற்பட்டதால் விடிய விடிய தூங்க முடியாமல் தவித்தனர்.

    கிராம புறங்களில் பகலிலும் மின்தடை செய்யப்படுகிறது. இந்த திடீர் மின் தடை தொடருமா என்று ஒரு அதிகாரியிடம் கேட்ட போது, ‘வழக்கமாக கோடை காலத்தில் மின் உபயோகம் அதிகரிக்கும். அதே போல் தற்போதும் அதிகரித்துள்ளது. தேவைக்கு தகுந்தாற்போல் தற்போது மின் உற்பத்தி இல்லை. இதனால் இருக்கும் மின்சாரத்தை பகிர்ந்து கொடுக்கும் வகையில் மின் தடை செய்யப்படுகிறது’ என்றார்.

    நெல்லை மாட்டத்தில் மின் உற்பத்தி தற்போது மிகவும் குறைந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலை பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2-வது அணு உலை மட்டுமே இயங்குகிறது. அங்கும் 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கு பதில் கோடை வெப்பம் காரணமாக 600 மெகாவாட் மின்சாரமே தயாரிக்கப்படுகிறது.

    மேலும் பணகுடி பகுதியில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து தயாரிக்கப்படும் நீர் மின்சாரமும் தண்ணீர் குறைந்ததால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மின்சாரத்தையே நம்ப வேண்டி உள்ளது.

    இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் திடீரென அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
    வேடசந்தூர் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேர்வைக்காரனூரில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. குடும்பத்துக்கு ஒருவர் முதல் இருவர் வரை இக்காய்ச்சலால் அவதிப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இது குறித்து வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நடமாடும் மருத்துவ குழு மூலம் கடந்த 2 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் நோயின் தீவிரம் குறையவில்லை.

    இதனால் சேர்வைக்காரனூரைச் சேர்ந்த கமலா (20), லெட்சுமி (25), பழனிச்சாமி (58) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு எந்தவித காய்ச்சல்? என டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட கிராமத்தில் மேலும் காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    டெல்லியில் நடக்கும் அரசியல் குழப்பத்தை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #NarendraModi
    புதுடெல்லி:

    டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தரவும் துணை நிலை கவர்னர் அலுவலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

    இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-



    டெல்லி முதல்-மந்திரி, துணை நிலை கவர்னர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துகிறார். பா.ஜனதா கட்சியினர், முதல்-மந்திரி வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்தியாளர்கள் முன்பு அமர்ந்து பேட்டி கொடுக்கின்றனர்.

    டெல்லியில் நடக்கும் இந்த நாடகங்களை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளார். இந்த அரசியல் குழப்பத்தை, பிரதமர் தலையிட்டு தீர்க்காததால் மக்கள் தான் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது கவலை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #NarendraModi #tamilnews
    ×